சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்ததை அடுத்து இந்தியாவிலும் எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனால் 5 மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ஏப்ரல் 29 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயரும் எனக் குறிப்பிட்டிருந்தார். மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தார்.செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை எனக் கூறியுள்ளார். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.எல்பிஜி, பெட்ரோலியம் மற்றும் டீசல் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கின்றன, விலைகளும் உயரவில்லை, எனவே பீதியடைய வேண்டாம். எண்ணெய் தட்டுப்பாடு என மக்கள் பீதியுடன் பல இடங்களில் எரிபொருள் வாங்குவதைப் பார்ப்பதாகவும், எண்ணெய் பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.ஏனாமில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக உள்ளதால் அவற்றை வாங்க, பெட்ரோல் பங்குகளில் ஆந்திர மக்கள் குவிந்தனர். ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் மின்வெட்டு மற்றும் தற்போது நடைபெற்று வரும் பயிர் அறுவடை உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வரும் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்தை விட புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாமில் எரிபொருள் விலை 12 முதல் 14 ரூபாய் வரை குறைவாக உள்ளது.இதனால் ஏனாமில் பெட்ரோல்-டீசல் வாங்க அண்டை மாநிலமான ஆந்திர மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருள்களை வாங்கிச் செல்கின்றனர். கேன் மற்றும் பேரல்களுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு விவசாயிகள் உள்ளிட்டோர் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தியா
சினிமா
MR X விமர்சனம்.. ஆர்யா & கெளதம் கார்த்திக் நடிப்பில்…
ஆர்யா நடிப்பில் மனு ஆனந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் மிஸ்டர் எக்ஸ். இதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக உடல்ரீதியாக கடுமையான உழைப்பை கொடுத்திருந்தார் ஆர்யா. இன்று இப்படமானது தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.
ஆங்கில திரைப்படத்திற்கு இணையான முயற்சி hatsoff..
மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் ஓரளவுக்கு ஹைப்பை கூட்டியது. அதுமட்டுமின்றி தண்ணீருக்குள் இருந்தபடி ஆர்யா செய்த சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி ஆச்சரியத்தை உண்டு பண்ணியது .
மஞ்சு வாரியருக்கு இது பெஸ்ட். ஆக்ஷன் சீன்கள் எல்லாம் சூப்பர். சரத்குமார் படத்தில் முக்கியமான கேரக்டர். சிறப்பாக அதனை டெலிவர் செய்திருக்கிறார். அனகா, ரைசா வில்சன், அதுல்யா ஆகியோரும் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். திபு படத்தை எலிவேட் செய்கிறார். குறிப்பாக அந்த 40 நிமிடங்கள். இயக்குநர் மனு ஆனந்த் ட்விஸ்ட் ஸ்க்ரீன்ப்ளேவில் சர்ப்ரைஸ் செய்கிறார். இது பெரிய வெற்றி”
கெளதம் கார்த்திக்கிற்கு நல்ல வில்லத்தனமான ஆக்க்ஷன் ஹீரோ ஆக நன்றாக பண்ணியுள்ளார்.
சண்டை காட்சிகள், எடிட்டிங், வேகமான திரைக்கதை, எல்லா கேரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், திப்புவின் இசை இவை எல்லாம் படத்தின் கூடுதல் சிறப்பு அம்சங்கள்
கோடை விடுமுறைக்கு ஜாலியாக குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் – kk
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம்.
தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் இந்தக் கதை, ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி
தயாரிப்பு – T.G.தியாகராஜன்
இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
எழுத்து இயக்கம் – D.D.பாலச்சந்திரன்
ஒளிப்பதிவு – A. M எட்வின் சகாய்
எடிட்டிங்க் – நாகூரான் இராமச்சந்திரன்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ்
கலை இயக்கம் – அதூரி ஜெய்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM
த.வெ.க சீனியர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை…
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, மார்ச் 15 டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் விஜய்யிடம் 3-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு, நேற்று இரவே விஜய் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு, பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை தேனாம்பேட்டையில் உள்ள ‘ப்ரெஸ்டிஜ் பாலிகன்’ வார் ரூமில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, மாநிலம் தழுவிய தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. த.வெ.க.-வை என்.டி.ஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் சூழலில், இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக இன்று காலை பட்டினம்பாக்கத்தில் ஆலோசனையைத் தொடங்கிய விஜய், பின்னர் தேனாம்பேட்டை வார் ரூமிற்குச் சென்றார். ஆலோசனை முடிந்து வெளியே வந்த விஜய், அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் ‘தம்ப்ஸ் அப்’ (Thumbs up) காட்டி உற்சாகப்படுத்தினார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராவதிலிருந்து சிபிஐ விலக்கு!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு விஜய் இன்று ஆஜராவதில் இருந்து சிபிஐ விலக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் விஜயின் பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய் தரப்பில் அனுமதி கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு இன்று விஜய் ஆஜராக சிபிஐ விலக்கு அளித்திருப்பதாகவும், ஆனால், விசாரணையை சென்னைக்கு மாற்ற சிபிஐ மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
2016 – 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர்களாக தனுஷ், கார்த்தி, ஆர்யா தேர்வு!
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் திரைப்பட விருதுகள், 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 32 பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016 – மாநகரம், 2017 – அறம், 2018 – பரியேறும் பெருமாள், 2019 – அசுரன், 2020 – கூழாங்கல், 2021 – ஜெய்பீம், 2022 – கார்கி ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளன.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகின்றன.
சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” – சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முற்றுப்புள்ளி!
வந்தே மாதரம் மற்றும் மா துஜே சலாம் பாடலை பாட மறுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு தனது பாணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது விளக்கத்தைத் தந்துள்ளார்.
தனது சமீபத்திய பேட்டியில் இதுபற்றி பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை எப்போதும் ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கௌரவிப்பதற்கான வழியாகத்தான் இருந்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரின் முன்னிலையில் வேவ் உச்சி மாநாட்டில் பங்கேற்றது முதல், இளம் நாகா இசைக்கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் குழுவை உருவாக்கியது வரை பன்முகத்தன்மையுடன் பணியாற்றியதை எடுத்துக்கூறியுள்ளார். படைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் இந்தியாவின் குடிமகனாக இருப்பதன் மூலம், அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் இந்தியா தனது வீடு, தனது உத்வேகம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் – தணிக்கையில் என்ன….பிரச்சினை…
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், என்னதான் பிரச்சினை என்பதை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
தவெக தலைவர் நடிகர் விஜய்-யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ல் உலகம் முழுவதும் திரையிட திட்டமிடப்பட்டிருந்து.
இந்த நிலையில்தான், படத்துக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் தாமதம் செய்து வருவதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, படத்துக்கு எதிராக தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரை தாக்கல் செய்தார்.
படத் தயாரிப்பு குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், “படத்தைப் பார்த்து தணிக்கை சான்றிதழ் அளிக்கும் தணிக்கை குழு உறுப்பினரே, எப்படி படத்துக்கு எதிராக புகார் அளிக்க முடியும்? இதில் உள்நோக்கம் உள்ளது” என்றனர்.
அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், “படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பும்படி மத்திய அரசு கூறவில்லை. தணிக்கைக்குழு தான் பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு அனுப்ப தணிக்கை வாரியத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியத்துக்கு எந்த உள்நோக்கமும் இல்லை” என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு பரிந்துரை செய்த பிறகு, அந்தப் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தது ஏன்? தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல” என்றார்.
படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்துள்ள நிலையில், ஒருவர் மட்டும் புகார் அளித்துள்ளார் அவர்களின் நோக்கம் திட்டமிட்டபடி படத்தை வெளியிடக்கூடாது என்பதுதான்” என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கில் ஜனவரி 9-ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கேவிஎன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த ‘ஜனநாயகன்’ குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் vs பராசக்தி… திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போகும் பொங்கல்!
பொங்கல் பண்டிகைக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி நேரடியாக மோதுகிறது. ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கலுக்கு களம் காண்கிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி இருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கல் விடுமுறையை குறிவைத்தது. 1950-60 காலகட்டத்திற்கான கதை களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா, இதில் மொழி பிரச்சனையை பேசியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரித்திருக்க, படம் பொங்கலன்று ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
பராசக்திக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், படம் குறித்தான கண்காட்சி அமைக்கப்பட, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், ஏற்கெனவே திரையுலகில் பரவி வந்த தகவலின்படி, பராசக்தியின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஜனவரி 14க்கு பதில், 4 நாட்களுக்கு முன்னதாக, அதாவது 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் ரிலீஸாகும் நிலையில், அதற்கு அடுத்த நாளே திரைக்கு வர இருக்கிறது பராசக்தி. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்திருப்பதாக பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மார்க்கெட் இருக்கும் சூழலில், இருவரின் படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாவதால், இரு படங்களுக்கும் சரியான அளவு திரைகள் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் வசூல் தாறுமாறாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தியும் சேர்ந்தே வருவதால், ஜனநாயகன் வசூலில் தாக்கம் இருக்கவே செய்யும் என திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது… எப்படியோ… இந்த பொங்கல்… சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையப் போகிறது.
